×

மீண்டும் உயரத் தொடங்கியது தங்க விலை !

நேற்று தங்க விலை ரூ.152 குறைந்ததைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்க விலை ரூ.152 குறைந்ததைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி,
 

நேற்று தங்க விலை ரூ.152 குறைந்ததைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்க விலை ரூ.152 குறைந்ததைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,623க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.48உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,984க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.70க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100  உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,700க்கு விற்கப்படுகிறது.