×

மாணவிகளைத் தவறான பாதையில் அழைக்க முயன்ற வழக்கு : நிர்மலா தேவிக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால், நிர்மலா தேவி மட்டும் ஆஜராகவில்லை. கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்த கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்காக அவர்கள் மூன்று பேரையும்
 

கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால், நிர்மலா தேவி மட்டும் ஆஜராகவில்லை.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்த கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்காக அவர்கள் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜராகும் படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

அதன் படி, கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால், நிர்மலா தேவி மட்டும் ஆஜராகவில்லை. அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் அதனால் தான் ஆஜராக முடியவில்லை என்றும் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிர்மலாதேவி தொடர்ந்து ஆஜராகாமல் காரணம் கூறி வருவதால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உடனே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றும் அவர் ஆஜராகாததால் இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.