×

மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி ஜனவரி 5 ஆம் தேதி தொடக்கம் !

கடந்த ஆண்டு, அரசின் கீழ் பயிற்சி பெற்ற 42 ஆயிரம் மாணவர்களில் 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனைத் தடுக்க, அரசே நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 2017 ஆம் ஆண்டு அமல் படுத்தியது. இதில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர்.
 

கடந்த ஆண்டு, அரசின் கீழ் பயிற்சி பெற்ற 42 ஆயிரம் மாணவர்களில் 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனைத் தடுக்க, அரசே நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 2017 ஆம் ஆண்டு அமல் படுத்தியது.

இதில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு, அரசின் கீழ் பயிற்சி பெற்ற 42 ஆயிரம் மாணவர்களில் 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக்  கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலமாகவே மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான இலவச பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பம் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 11:59 மணியோடு நிறைவடைந்தது. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.