×

மழையால் புத்தகத்தை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகம் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் புகுந்ததால் மாணவர்களின் புத்தகங்களும் சேதமாகியுள்ளன. தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் புகுந்ததால் மாணவர்களின் புத்தகங்களும் சேதமாகியுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று
 

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் புகுந்ததால் மாணவர்களின் புத்தகங்களும் சேதமாகியுள்ளன. 

தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் புகுந்ததால் மாணவர்களின் புத்தகங்களும் சேதமாகியுள்ளன. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் லக்கம் பட்டியில் ரூ.1 கோடியே 24 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மழை பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு வழங்க புதிய புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.