×

‘மனைவி மரணம்’.. போலீசுக்கு தகவல் கொடுக்காமலிருந்த கணவர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் !

பள்ளிக்கரணையில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் மகள் பாரதி(24). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவருடன் திருணம் ஆகியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் மகள் பாரதி(24). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவருடன் திருணம் ஆகியுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தான், இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் பாரதிக்கு உடல்நிலை சரியில்லை என்று ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் பாரதியை மேல்சிகிச்சைக்காகச்
 

பள்ளிக்கரணையில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் மகள் பாரதி(24). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவருடன் திருணம் ஆகியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் மகள் பாரதி(24). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவருடன் திருணம் ஆகியுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தான், இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் பாரதிக்கு உடல்நிலை சரியில்லை என்று ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் பாரதியை மேல்சிகிச்சைக்காகச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு பாரதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் ராமகிருஷ்ணன் காவல்துறைக்குக் கூட தகவல் கொடுக்காமல், பாரதியின் உடலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு ராமகிருஷ்ணன், பாரதி இறந்து விட்டதாக அளித்த தகவல் பாரதியின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டதாக ராமகிருஷ்ணன் கூறியதை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர், பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அதுமட்டுமில்லாமல், வரதட்சணை காரணமாக ராமகிருஷ்ணன் தான் பாரதியைக் கொலை செய்திருப்பார் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதனால், ராமகிருஷ்ணனின் வீட்டிலிருந்த பாரதியின் உடலை போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் அறிக்கை வந்தால், பாரதி உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்தாரா அல்லது ராமகிருஷ்ணன் கொலை செய்தாரா என்பது தெரிய வரும். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.