×

மத்திய அரசு பணி என்று போலி வேலைவாய்ப்பு, பணம் சுருட்டல்!

வங்கியில் வேலை என்று தரகர்கள் மூலம் வாட்சப்பில் விளம்பரம் வெளியிட்டதன் மூலமாக 1000 இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள். வாட்ஸ்ப்ல வந்தாதான் வேதவாக்காச்சே நம்மாளுங்களுக்கு. வேலைக்கு சேர்ந்தாச்சு, வேலை என்ன? வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடையின்றி வழங்குவதுதான் பணி. ’ஆபரேசனல் எக்சிகியூட்டிவ்’ என்ற ஐடி கார்டு இரண்டடி நீளத்தில் தொங்கவிட்டுக்கொண்டு. ‘டிஜிட்டல் பேங்கிங் இந்தியா ‘ என்ற தனியார் நிறுவனத்தை பிரவீன், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் , போரூர் உள்பட
 

வங்கியில் வேலை என்று தரகர்கள் மூலம் வாட்சப்பில் விளம்பரம் வெளியிட்டதன் மூலமாக 1000 இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள். வாட்ஸ்ப்ல வந்தாதான் வேதவாக்காச்சே நம்மாளுங்களுக்கு. வேலைக்கு சேர்ந்தாச்சு, வேலை என்ன? வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடையின்றி வழங்குவதுதான் பணி. ’ஆபரேசனல் எக்சிகியூட்டிவ்’ என்ற ஐடி கார்டு இரண்டடி நீளத்தில் தொங்கவிட்டுக்கொண்டு.

‘டிஜிட்டல் பேங்கிங் இந்தியா ‘ என்ற தனியார் நிறுவனத்தை பிரவீன், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் , போரூர் உள்பட 4 இடங்களில் ‘கிளைகள்’ அமைத்து செயல்பட்டு வருகின்றனர். வங்கியில் வேலை என்று தரகர்கள் மூலம் வாட்சப்பில் விளம்பரம் வெளியிட்டதன் மூலமாக 1000 இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள். வாட்ஸ்ப்ல வந்தாதான் வேதவாக்காச்சே நம்மாளுங்களுக்கு. வேலைக்கு சேர்ந்தாச்சு, வேலை என்ன? வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடையின்றி வழங்குவதுதான் பணி. ’ஆபரேசனல் எக்சிகியூட்டிவ்’ என்ற ஐடி கார்டு இரண்டடி நீளத்தில் தொங்கவிட்டுக்கொண்டு.
 

இது மத்திய அரசு பணி என்று கூறி 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரகர்கள் மூலம் சிலரிடம் வசூல் நடந்திருக்கிறது, சிலரிடம் முன்பணம் பெறாமல் பெருந்தன்மையுடன் வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள். வேலை செய்தால் சம்பளம் தரணுமே, அப்போதுதான் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் தரவில்லையாம். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கே சம்பள தாமதமாகிறது, நாம புதுசா ஆரம்பிச்ச மத்திய அரசு கிளையாச்சா, அதான் லேட்டாகுது என நான்கு மாதங்கள் டபாய்த்திருக்கிறார்கள். நான்காவது முடிவில் சம்பளம் கேட்டு வேலை செய்தவர்கள் கோடம்பாக்கம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாங்கி கொடுப்பதாக கூறி லட்சங்களை பறித்துக் கொண்ட இடைதரகர்கள் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ’மத்திய அரசு பணியாளர்களின்’ கோரிக்கையாக உள்ளது.