×

மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன்- கமல்ஹாசன்

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தொடங்கினார். மதுரை, தேனி, சிவகாசி, திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்த அவர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் பரப்புரை மேற்கொண்டார். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி
 

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தொடங்கினார். மதுரை, தேனி, சிவகாசி, திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்த அவர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் பரப்புரை மேற்கொண்டார். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்கவேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது.

கர்மவீரரின் ஊரில், கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம்; மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன். தம் வீட்டு வாசல்களில் நின்று வெற்றி உமதே என குரலெழுப்பும் மாதர்களிடம் சொன்னேன் ‘வெற்றி நமதே’” எனக் கூறினார்.