×

மது கிடைக்காததால் விரக்தியடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை: அயனாவரத்தில் பரபரப்பு!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி
 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. 

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்பாண்டி (27) மற்றும் அசன்மைதீன்(35) ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்து உயிரிழந்தனர். அதே போல மது கிடைக்காத ஆத்திரத்தில் செங்கல்பட்டை சேர்ந்த  சிவசங்கர் (32),பிரதீப்(32),சிவராமன் (30) ஆகிய மூன்று பேரும் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்து உயிரிழந்தனர். இவ்வாறு மதுகிடைக்காததால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த செல்வம்(52) என்பவர் மது கிடைக்காத விரக்தியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.