×

‘மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!’ :சர்ச்சையை கிளப்பிய பாஜக!

அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகள் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின்
 

அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன்  தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகள் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக பாஜகவின் டிவிட்டர்  பக்கத்தில்,  “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

இந்த சர்ச்சை பதிவு  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெரியார் வழியை பின்பற்றுபவர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்திலிருந்து  பெரியாரை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட  ட்வீட்டானது நீக்கப்பட்டது.