×

மணல் கடத்தல்: செய்தி சேகரிக்க சென்ற தென்காசி பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

சோதனைச் சாவடியில் நின்றிருந்த சிலர் அவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச் சாவடி வழியாக, கேரளாவுக்கு M-SAND கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு செய்தியாளர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது செய்தியாளர்களைக் கண்டதும் புளியரை சோதனைச் சாவடியில் நின்றிருந்த சிலர் அவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும்
 

சோதனைச் சாவடியில் நின்றிருந்த சிலர் அவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன் அவர்கள் மீது தாக்குதல்  நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச் சாவடி வழியாக, கேரளாவுக்கு M-SAND கடத்தப்படுவதாகத்  தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு செய்தியாளர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது செய்தியாளர்களைக் கண்டதும்  புளியரை சோதனைச் சாவடியில் நின்றிருந்த சிலர் அவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன் அவர்கள் மீது தாக்குதல்  நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையினர் முன்னிலையில் நடந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக சிவகாசியில் குமுதம் ரிப்போர்ட்டர் கார்த்திக் அதிமுகவினர் சிலர்  கொலை வெறித் தாக்குதல் நடத்தியது கவனிக்கத்தக்கது.