×

மக்கள் கூடுவதை தவிர்க்க வீடு தேடி செல்லும் ஏ,டி.எம் இயந்திரங்கள்!

மக்களை அதிலிருந்து காப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களை அதிலிருந்து காப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதே போல, மக்கள் வீட்டிலிருந்து
 

மக்களை அதிலிருந்து காப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களை அதிலிருந்து காப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் அத்தியாவசிய  கடைகளை தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதே போல, மக்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கடும் நடவடிக்கை  எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியிருப்பதன் பேரில், போலீசார் கடும்  தண்டனை கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வசதிக்காக  ஸ்டேட் வங்கி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் படி நெல்லை மாவட்டத்தில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பதற்காக ஏடிஎம் எந்திரத்தை வீடு வீடாக சென்று பணத்தை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.