×

மகனுக்கு சீட் கொடுத்த எடப்பாடிக்கே ஆப்பு.. ராஜன் செல்லப்பாவை தூண்டிவிட்ட ஓ.பி.எஸ்..!

ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தான் ராஜன் செல்லப்பா பொங்கி எழுந்துள்ளார். ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு வகையில் ராஜன் செல்லப்பாவை தூண்டி விட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். தனது மகன் ராஜ் சத்யன் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் கண்டுகொள்ளாமை தான் காரணம் என நினைக்கிறாராம் ராஜன் செல்லப்பா. அதே நேரத்தில் ஓ.பி.எஸ் தனது மகனை மட்டும் வெற்றி பெற வைத்து விட்டார். மதுரை தொகுதியை அதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேனி தொகுதியில் பிரதமரை
 

ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தான் ராஜன் செல்லப்பா பொங்கி எழுந்துள்ளார்.  ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு வகையில் ராஜன் செல்லப்பாவை தூண்டி விட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.

தனது மகன் ராஜ் சத்யன் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் கண்டுகொள்ளாமை தான் காரணம் என நினைக்கிறாராம் ராஜன் செல்லப்பா.  அதே நேரத்தில் ஓ.பி.எஸ் தனது மகனை மட்டும் வெற்றி பெற வைத்து விட்டார். மதுரை தொகுதியை அதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேனி தொகுதியில் பிரதமரை வரவழைத்து தனது  மகனுக்காக பிரச்சாரம் செய்ய வைத்தார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தேனியில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். 

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணத்தை தண்ணீராய் தெளித்து ஓ.பி.எஸ் மகனை வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால், எடப்பாடி ஆதரவாளராக இருக்கும் தனது மகனுக்காக எடப்பாடி ஆதரவு அமைச்சராக உள்ளூரில் இருக்கும் இருக்கும் செல்லூர் ராஜு கூட கண்டு கொள்ளவில்லை. இதெல்லாம் தான் தனது மகன் தோற்கக் காரணம். ஓ.பிஎஸ் மகனை போல அனைத்து வகைகளிலும் கவனித்து இருந்தால் தனது மகன் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார்  என நினைத்தே ஒற்றைத் தலைமையை உரக்க முழங்கி இருக்கிறார் ராஜன் செல்லப்பா என்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் காட்டும் அக்கறையை தென் மாவட்டங்கள் மீது காட்டுவதில்லை.இப்படியே போனால் தென் மாவட்டங்களில் இனி அதிமுக அரசியல் எடுபடாது என்பதால் இதுவரை எடப்பாடி ஆதரவாளராக இருந்த ராஜன் செல்லப்பா இப்போது ஓ.பி.எஸ் -ஈ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் எதிராக கிளம்பி இருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு தலைவராக, முதல்வராக, ஆளும் திறன் உள்ளவராக தென்மாவட்ட மக்கள் ஏற்கவில்லை என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அதுவும் ஜெயலலிதாவால் அதிகம் சுட்டிகாட்டப்பட்டவர் தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும். ஒற்றை தலைமை வேண்டும். இப்போது இருப்பவருக்கு ஆளுமை திறன் இல்லை என்று இஷ்டத்துக்கும் தாக்கி இருக்கிறார். இத்தனைக்கும் அவரின் மகனுக்கு எம்பி சீட் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான்.

எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் 9 பேரும் ஜெயலலிதா சமாதிக்கு செல்லவில்லை என்ற பேச்சு அதிமுகவில் அடிபட்டு வருகிறது. எது எப்படியோ ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தான் ராஜன் செல்லப்பா பொங்கி எழுந்துள்ளார்.  ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு வகையில் ராஜன் செல்லப்பாவை தூண்டி விட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.