×

‘போலீஸ் வருதுடா எஸ்கேப் ஆயிடு’.. திருடனுக்குத் தகவல் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் !

பல காலமாக சிக்காமல் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மகேஷ் என்ற திருடனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்துள்ளனர். திரைப்படங்களில் ஒரு திருடனோ அல்லது ஒரு ரவுடியோ இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்காக போலீஸ் ஒருவர் இருப்பார். மற்ற போலீசார் ரவுடிகளை பிடிக்க முயலும் போது அவர்களுக்கு உதவும் போலீஸ் ரகசிய தகவல் கொடுத்து எஸ்கேப் ஆக வைத்து விடுவார் என்பதை பல படங்களில் பார்த்திருப்போம். அதே போல, ரகசிய தகவல் கொடுத்து திருடனைத் தப்பிக்க வைத்த
 

பல காலமாக சிக்காமல் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மகேஷ் என்ற திருடனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்துள்ளனர்.

திரைப்படங்களில் ஒரு திருடனோ அல்லது ஒரு ரவுடியோ இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்காக போலீஸ் ஒருவர் இருப்பார். மற்ற போலீசார் ரவுடிகளை பிடிக்க முயலும் போது அவர்களுக்கு உதவும் போலீஸ் ரகசிய தகவல் கொடுத்து எஸ்கேப் ஆக வைத்து விடுவார் என்பதை பல படங்களில் பார்த்திருப்போம். அதே போல, ரகசிய தகவல் கொடுத்து திருடனைத் தப்பிக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவர் கடந்த ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த போது, பல காலமாக சிக்காமல் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மகேஷ் என்ற திருடனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்துள்ளனர். காவல்துறை துரத்துவதை எப்படியோ கண்டுபிடித்த மகேஷ் தப்பியோடிக் கொண்டே இருந்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் மகேஷ் போலீசாரின் தீவிர முயற்சியால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவரின் செல்போனை சோதனை செய்த மற்ற போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தான் அவருக்கு தகவல் கொடுத்து வந்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியாகக் குருமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பேண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.