×

போக்குவரத்து விதி மீறல்: தமிழகத்தில் 1.2 லட்சம் லைசன்ஸ் ரத்து!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக 1.2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பங்கேற்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக
 
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக 1.2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பங்கேற்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. இதில் 2 கோடிக்கும் அதிகமானது இருசக்கர வாகனங்கள்தான். சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாதவர்களாகவும் சீட் பெல்ட் போடாதவர்களாகவும்தான் உள்ளன. இதனால்தான் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வண்டியை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்ட 1.2 லட்சம் கேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்தக்கள் சிக்குபவர்களில் 40 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைத்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், விபத்து நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவிலேயே அதிக விபத்து நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. 201ம் ஆண்டு கணக்குப் படி நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் 17 ஆயிரம் விபத்துக்கள் நடந்திருந்தது. இதை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 2019ம் ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 870 ஆக இருந்தது. இது கடந்த 2019ம் ஆண்டு 375 ஆக குறைந்துள்ளது. விபத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.