×

பொன்.மாணிக்கவேலுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக
 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வசம் சென்றதும், அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார்.

இதையடுத்து, இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

தொடர்ந்து தனக்கு ஜாமின் கோரி வீரசண்முகமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதா? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், முறையாக விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன், வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, தன்னை கைது செய்த நடவடிக்கையில், மனித உரிமை மீறல் இருந்ததாக வீரசண்முகமணி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் வாசிங்க

பொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!