×

பொன்பரப்பி பிரச்னை; திமுக பிரமுகர் உயிருக்கு ஆபத்து?!..

இந்த பிரச்னை தொடர்பாக விசிக சார்பில் வரும் 24-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. பொன்பரப்பி பிரச்னையில் விசிக ஆதரவாக செயல்படும் திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம்
 

இந்த பிரச்னை தொடர்பாக விசிக சார்பில் வரும் 24-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

பொன்பரப்பி பிரச்னையில் விசிக ஆதரவாக செயல்படும் திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம்  தேதி நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பாமக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நிகழ்த்தப்பட்டது என செய்திகள் வெளியாகின. 

இந்த பிரச்னை தொடர்பாக விசிக சார்பில் வரும் 24-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விசிக ஆதரவாக செயல்படும் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது.

பொன்பரப்பியில் பாமக மற்றும் இந்து முன்னணியால் நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்திற்கு பின்பு விசிகவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக செயல்பட்டுவருவதால் எஸ்.எஸ். சிவசங்கர்-க்கு (திமுக மாவட்ட செயலாளர்) பாமக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரைப்பற்றிய அவதூறு பரப்புதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பொன்பரப்பி, பொன்னமராவதி என தொடர்ந்து சாதிய பிரச்னைகள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. பாமக ஒரு சாதிக்கட்சி என்றும், அதேபோல் செயல்படும் சாதிக்கட்சிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்புமணி தொகுதியில் மறு வாக்குப்பதிவு… அதிர வைக்கும் தேர்தல் ஆணையம்.. கலக்கத்தில் பாமக..!