×

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை- ஆர்பிஐ ஆளுநர்

பொதுத்துறை அல்லது அரசு வங்கிகளை விரைவில் தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளை முதலில் தனியார்மயமாக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க போவதாக மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு 2021 நடைபெற்றுவருகிறது. அதில் பேசிய ஆர்.பி.ஐ., ஆளுநர் சக்தி காந்த தாஸ், “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக
 

பொதுத்துறை அல்லது அரசு வங்கிகளை விரைவில் தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளை முதலில் தனியார்மயமாக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க போவதாக மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு 2021 நடைபெற்றுவருகிறது. அதில் பேசிய ஆர்.பி.ஐ., ஆளுநர் சக்தி காந்த தாஸ், “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. லாபமீட்டாத பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.