×

‘பைக்கை லாக் பண்ணிட்டு 8 போடு’….தடையை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு போலீசாரின் நூதன தண்டனைகள்!

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடக்கை எடுக்குமாறு மத்திய அரசு
 

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இருப்பினும் தமிழக போலீசார், கொரோனாவின் தாக்கத்தை வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் புரிந்து கொள்ளும் வகையில், நூதன தண்டனை அளித்து வருகின்றனர். செருப்பை கழற்ற சொல்லி ஒற்றைக் காலில் நிற்பது, உச்சி வெயிலில் உடற்பயிற்சி செய்ய சொல்வது, தோப்புக்கரணம், அங்கபிரதட்சணம் என பல்வேறு நூதன தண்டனைகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மற்றும் ஒட்டபிடாரம் பகுதியில் இருக்கும் போலீசார் தடையை மீறி வெளியே வருபவர்களை அவர்களது தந்தையை கொண்டே தண்டனை வழங்கச் சொல்லியும், பைக்கை லாக் செய்து விட்டு 8 போட வைத்தும் வருகின்றனர். இருப்பினும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் வெளியே சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர்.