×

பேருந்துக்குள் பெய்த மழை…பயணிகள்மட்டுமல்ல ஓட்டுநருக்கும் இது தான் கதி!

கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அய்யம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தின் கூரை சேதமடைந்தது. இதனால்
 

கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால்  அய்யம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தின் கூரை சேதமடைந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்தனர்.

அதேபோல்  ஓட்டுநருக்கும் இதே கதி தான். ஓட்டுநர்  இருக்கைக்கு மேலே மழைநீர் வழிந்து வர,  ஓட்டுநரும்  குடையை தலைக்கு மேலே வைத்து கொண்டு தனது வேலையை தொடர்ந்தார்.   இதை பேருந்தில் பயணித்த ஒருவர், வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.