×

பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வையுங்கள்: மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகை தர உள்ளதால், அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைப்பதற்கு அனுமதி கோரி தமிழக அரசு நீதி மன்றத்தில் மனுவை அளித்துள்ளது. பேனர் விழுந்து இறந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு பேனருக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்தது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகை தர உள்ளதால், அவர்களை வரவேற்கும் வகையில்
 

இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகை தர உள்ளதால், அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைப்பதற்கு அனுமதி கோரி தமிழக அரசு நீதி மன்றத்தில் மனுவை அளித்துள்ளது.

பேனர் விழுந்து இறந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு பேனருக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்தது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகை தர உள்ளதால், அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைப்பதற்கு அனுமதி கோரி தமிழக அரசு நீதி மன்றத்தில் மனுவை அளித்துள்ளது. அந்த மனு நாளை விசாரிக்கப் பட உள்ளது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன், பிரதமர் தான் பேனர் கலாச்சாரத்திற்கு  முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், ‘ பிரதமர் அவர்களே, சுபஸ்ரீயின் மரண இழப்பைச் சமாளிக்க தமிழ்நாடு மற்றும் தமிழ் நாடு மக்கள்  போராடி வரும் நிலையில், உங்கள் பதாகைகளை அமைப்பதற்கான அனுமதியைப் பெறத் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை நீங்கள் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து துவக்கி வைக்க வேண்டும். இந்த துவக்கம் தமிழியர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையைப் பிரதிபலிக்கும், மேலும் அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தைப் பெறும். ஜெய் ஹிந்த் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.