×

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு : ரஜினிகாந்த் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கு!

கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல்,
 

கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

ரஜினிகாந்த்தை எதிர்த்துப் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அவரது இல்லத்திற்கு ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். இப்போது போராட்டம் எல்லாம் ஓய்ந்திருக்கும் நிலையில், தன் வீட்டில் இருக்கும் போலீஸ் பாதுகாப்பை  விலக்கிக்கொள்ளுமாறு ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார். அதன் படி, இன்று முதல் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பிற்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.