×

பெண்களே உஷார்… தங்கும் விடுதியில் ரகசிய கேமரா… அதிர்ச்சி கிளப்பும் தகவல்கள்

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி குளியறைகளில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தலைநகரமான சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பணி நிமித்தமாக வருகின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். தனி ஆளாக அறை எடுத்தால் பாதுகாப்பு பிரச்னை, பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல பெண்கள் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர். இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர்
 

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி குளியறைகளில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைநகரமான சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பணி நிமித்தமாக வருகின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். தனி ஆளாக அறை எடுத்தால் பாதுகாப்பு பிரச்னை, பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல பெண்கள் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர் முதல் தெருவில் ஒரு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதை திருச்சியை சேர்ந்த சஞ்சீவி என்பவர் நடத்தி வந்தார். பெண்களுக்கான தங்கும் விடுதி என சமூக வலைதளங்களிலும் இதை அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். எனவே 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த விடுதியில் தங்கியுள்ளனர். அனைவரும் ஐடியில் பணிபுரிபவர்கள்.

இதனையடுத்து சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என சஞ்சீவ் அறைக்கு வந்து அடிக்கடி என்னனமோ செய்திருக்கிறார். இதனால் அறையில் ரகசிய கேமரா ஏதும் பொருத்தப்பட்டிருக்குமோ என சந்தேகித்த பெண்கள் தங்கள் மொபைலில், ஹிடன் கேமரா டிடெக்டர் (Hidden Camera detector) என்ற செயலி மூலம் கேமராக்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

அவர்கள் நினைத்தபடியே அறையில் இருக்கும் குளியலறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத ரகசிய கேமரா இருந்தது. இதனை கண்டு பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சஞ்சீவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சஞ்சீவிடமிருந்து ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஏராளமான வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சென்னை விடுதிகளில் தங்கி இருக்கும் பெண்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.