×

பெண் துப்புரவு பணியாளரின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்: நெகிழ வைக்கும் சம்பவம்!

காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் : காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் காவல் நிலையத்தைத் துப்புரவு செய்பவர் அனுஷ்யா. கடந்த 10 மாதங்களாக இந்த பணியை செய்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து
 

காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் : காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் காவல் நிலையத்தைத் துப்புரவு செய்பவர் அனுஷ்யா. கடந்த 10 மாதங்களாக இந்த பணியை செய்து வருகிறார். இவருக்கு நேற்று  பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையறிந்த ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லினார். இதையடுத்து காவல் நிலையத்திலேயே அனைத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மத்தியில்  அனுஷ்யா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். பின்பு அவருக்கு பரிசாக புடவை வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தெரிவித்த போலீசார் ஒருவர், ‘அவருக்குக்  கணவர் கிடையாது. மகனும் குடிப்பழக்கத்தால் தாயை கவனிக்கவில்லை.  இங்கு துப்புரவு வேலை செய்யும் அவருக்கு 2 வேளை உணவு, மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. அனுஷ்யா  அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவார். குடும்பத்தில் ஒருவர் போல எங்களிடம் உரிமையுடன் பழகுவார். இதனால் அவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்’ என்று தெரிவித்துள்ளார்.