×

புத்தாண்டிற்குள் மெரினாவை சுத்தப்படுத்துங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!

மெரினா கடற்கரையை வரும் புத்தாண்டிற்குள் தூய்மையாக மாற்றத் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை: மெரினா கடற்கரையை வரும் புத்தாண்டிற்குள் தூய்மையாக மாற்றத் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து வடபழனியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை
 

மெரினா கடற்கரையை வரும் புத்தாண்டிற்குள் தூய்மையாக மாற்றத் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: மெரினா கடற்கரையை வரும் புத்தாண்டிற்குள் தூய்மையாக மாற்றத் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து வடபழனியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், வினீத் கோத்தாரி  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டிட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் உள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது சாத்தியமா என சென்னை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்றும், கட்டிட உரிமையாளர் மீது குறை பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து மெரினா கடற்கரை குப்பை கோலமாக காட்சி அளிக்கிறது என வேதனைத் தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா கடற்கரையை முழுமையாக சுத்தப்படுத்திட திட்டம் வகுத்துச் செயல்படுத்தவும் உத்தரவிட்டனர். முதலில் மெரினாவை சுத்தப்படுத்துங்கள், பின்னர் படிப்படியாக மாவட்டம், மாநிலம் முழுவதும் தூய்மைப்படுத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.