×

புதைத்து வைத்த 110 சவரன் கொள்ளை போனதாக புகார் : நாடகம் ஆடிய மாமனார், மருமகள் !

அவரின் வீட்டில் இருந்த நகையைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டுச் சென்றதாகக் காவல் நிலையத்தில் முதியவர் ராஜபாளையன் புகார் அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியவாடி பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜபாளையன். அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் கொள்ளையர்களுக்குப் பயந்து இவர் தனது மனைவி மற்றும் மகளின் 110 சவரன் நகையைத் தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க் கிழமை தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது அவரின் வீட்டில் இருந்த நகையைக்
 

அவரின் வீட்டில் இருந்த நகையைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டுச் சென்றதாகக் காவல் நிலையத்தில் முதியவர் ராஜபாளையன் புகார் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியவாடி பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜபாளையன். அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் கொள்ளையர்களுக்குப் பயந்து இவர் தனது மனைவி மற்றும் மகளின் 110 சவரன் நகையைத் தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். 
இவர் கடந்த செவ்வாய்க் கிழமை தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது அவரின் வீட்டில் இருந்த நகையைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டுச் சென்றதாகக் காவல் நிலையத்தில் முதியவர் ராஜபாளையன் புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் அக்குடும்பத்தில் உள்ள நபர்களைத் தனித் தனியே விசாரணை நடத்தியுள்ளனர். 

அவரது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கோவிலுக்குச் சென்ற ராஜபாளையனின் மருமகள், தான் முன்கூட்டியே வீட்டுக்கு வந்து நகைகளை எடுத்து விட்டதாகவும், அதில் மொத்தமாக 10 சவரன் நகை மட்டுமே புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ராஜபாளையன் 110 சவரன் இருந்ததாகப் பொய் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து நகை காணாமல் போனதாக நாடகம் ஆடிய மாமனார் மற்றும் மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.