×

பிளாஸ்டிக் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?- மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை: பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, 2019-ஆம்
 

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இம்மாத தொடக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மத்திய ரசாயன துறையை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.