×

பிரதமர் என்றும் பாராத நெட்டிசன்கள்: உலக அளவில் முதலிடம் பிடித்த #GoBackModi ஹேஸ்டாக்!

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi ஹேஸ்டாக், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை: மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi ஹேஸ்டாக், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் உயிர் நாடியாக பார்க்கப்படும் டெல்டா மாவட்டங்கள், கஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு இறையாகி தவித்துக் கொண்டிருந்த போது, தமிழகம் பக்கம் எட்டிப் பார்த்திடாத பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து சென்றுள்ளார். #GoBackMODI #GoBackSadistModi.. Where is the development
 

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi ஹேஸ்டாக், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

சென்னை: மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi ஹேஸ்டாக், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

தமிழகத்தின் உயிர் நாடியாக பார்க்கப்படும் டெல்டா மாவட்டங்கள், கஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு இறையாகி தவித்துக் கொண்டிருந்த போது, தமிழகம் பக்கம் எட்டிப் பார்த்திடாத பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து சென்றுள்ளார். 

கஜா புயல் தாக்கிச் சென்ற போதும் சரி, அதற்கு முந்தைய சில இக்கட்டான சூழல்களிலும் சரி, பாஜக பிரமுகர்களின் பிரதான வாதமாக இருந்தது, ‘தமிழர்கள் ஓட்டுப் போட்டா மோடி பிரதமர் ஆனாரு?’ என்பது தான். ஹெச்.ராஜா போன்ற பாஜகவின் ஆகப்பெறும் தலைவர்கள், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இது போன்ற கேள்விகளை மிக எளிதாக கேட்டுவிட்டு கடந்து செல்கிறார்கள். ஆனால், பாவம் இந்திய ஒருமைப்பாட்டையே அவர்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள், இழிவு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது கடினம் தான்.

இது போல் பேசி பேசி, தொடர்ந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து, இறுதியாக பிரதமரை அழைத்து வந்து மக்களின் வெறுப்புக்கு இறையாக்கி விடுகிறார்கள் பாஜகவினர்.

ஏனெனில், இது முதல் முறை அல்ல. இதற்கு முன் காவிரி சர்ச்சை உச்சத்தில் இருந்த போதும் சரி, ஸ்டெர்லைட் ஆலை அப்பாவி தமிழர்களின் உயிரை குடித்தபோதும் சரி, நீட் என்னும் அரக்கனுக்கு தமிழக மாணவர்கள் பலிகெடா ஆன போதும் சரி, தமிழகம் தனித்துவிடப்பட்டதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். 

அதன் வெளிப்பாடே, மோடி தமிழகம் வரும்போதெல்லாம் உச்சக்கட்ட வெறுப்பை உமிழ்ந்து வழி அனுப்பி வைக்கப்படுகிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அந்த வகையில், மோடியின் இன்றைய தமிழக விசிட்டும் #GoBackModi என்ற ஹேஸ்டாக்கால் வரலாற்றில் நின்றிருக்கிறது. இன்று காலை மதுரைக்கு மோடி புறப்பட இருந்த சூழலில், நேற்று மாலை முதலே இந்த ஹேஸ்டாக் ஆயுதத்தை கையில் எடுத்து விட்டனர் நம் தமிழக நெட்டிசன்கள். 

விறுவிறுவென பரவத் தொடங்கிய இந்த ஹேஸ்டாக், இன்று காலை உலக அளவில் ட்ரெண்டாகியது. அதேபோல், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து ஸ்டாலின் பேசிய கூட்டத்தில், ‘மோடியை சாடிஸ்ட்’ என விமர்சித்திருந்தார். அதை தொடக்கமாக வைத்து நேட்டிசன்கள் ட்ரெண்டாக்கிய, #GoBackSadistModi என்ற ஹேஸ்டாக்கும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினரும் #TNWelcomesModi என்ற ஹாஸ்டாக்கில் மோடியை வரவேற்று நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்க முயன்றனர். ஆனால், ஆண்டி இந்தியன்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை என்றே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.