×

பாலியல் வழக்கிலிருந்து முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் !

முகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்து முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முகிலன் சென்னையில் கொடுத்த பேட்டிக்குப் பிறகு அவரை காணவில்லை. முகிலன் காணாமல் போன வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. முகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான முகிலன், திருப்பதியில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து பாலியல் வழக்கில்
 

முகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்து முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முகிலன் சென்னையில் கொடுத்த பேட்டிக்குப் பிறகு அவரை காணவில்லை. முகிலன் காணாமல் போன வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. முகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான முகிலன், திருப்பதியில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனையடுத்து பாலியல் வழக்கில் ஜாமீன் வழங்குமாறு முகிலன் நீதிமன்றத்தில் மனு அளித்தார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதி மன்றம், தலைமறைவான நாட்களில் எங்கே இருந்தீர்கள்? என்ன செய்தீர்கள்? என்பது குறித்த தகவலைக் கூறினால் ஜாமீன் வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தது. 

இன்று மீண்டும் அந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற கிளை, காணாமல் போன நாட்களில் நடந்ததை பற்றி முகிலனைச் சொல்ல சொல்லி உத்தரவிட்டது. அதன் பின்னர், முகிலன் தான் தலைமறைவாகவில்லை என்றும் தன்னை யாரோ கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த போது தான் என்னைக் காவலர்கள் பிடித்தனர் என்று தலைமறைவான நாட்களில் நடந்த முழு விவரத்தையும் நீதிபதியிடம் கூறினார்.

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும், சிபிசிஐடி காவல்துறையினரிடம் 3 நாளுக்கு ஒரு முறை ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.