×

பாத்திமா தற்கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

கடந்த 8 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 8 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 5 மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் ஏதோ மர்மம் உள்ளது
 

கடந்த 8 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 8 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 5 மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அதில், மத்திய குற்றப்பிரிவு விசாரணையில், சிபிஐயில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகளும் இணைந்துள்ளனர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.