×

பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவிற்கு இந்திய அளவில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் செல்வாக்கு அனைவரும் அறிந்ததே. அதற்கு பல காரணங்களை அரசியல் வல்லுநர்கள் கூறினாலும், தமிழக பாஜக தலைமை அதை பரிசீலிப்பதாக தெரியவில்லை. ஆளுக்கொரு கருத்து, ஆளுக்கொரு பார்வை என தமிழக பாஜக தலைவர்கள் பேசி
 

தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு இந்திய அளவில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் செல்வாக்கு அனைவரும் அறிந்ததே. அதற்கு பல காரணங்களை அரசியல் வல்லுநர்கள் கூறினாலும், தமிழக பாஜக தலைமை அதை பரிசீலிப்பதாக தெரியவில்லை.

ஆளுக்கொரு கருத்து, ஆளுக்கொரு பார்வை என தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருவதை தமிழக மக்கள் ரசிக்கவில்லை என்பதே முக்கிய காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 

குறிப்பாக, தமிழக ஆட்சி அரசியலில் பாஜக தலையீடு இருப்பதை பல சம்பவங்கள் வெளிப்படையாகவே உணர்த்திவிடுகின்றன. இதுவும் தமிழக மக்களுக்கு ஒரு வித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

அவர்களுடன் கூட்டணி வைக்க பிரதான கட்சிகளே தயங்கி வரும் நிலையில், “தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழக அரசியல் தலைவர்கள், அதிலும் குறிப்பாக அதிமுக தலைவர்களை மிகக்கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன், தேசிய ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் தலைவர்களை விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த பேச்சு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.