×

‘பஸ் டே’ என்ற பெயரில் பேருந்தில் அராஜகம்: 17 மாணவர்களை கைது செய்த போலீசார்!?

தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய 17 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் சென்னை: தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய 17 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் பஸ் டே என்ற பெயரில் அரசு பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்வதைக் கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது போன்ற பஸ் டே கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகிறது. இதனால் பேருந்து
 

தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய 17 மாணவர்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

சென்னை: தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய 17 மாணவர்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

பஸ்  டே என்ற பெயரில் அரசு பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்வதைக் கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது போன்ற பஸ் டே கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகிறது. இதனால் பேருந்து தினம் கொண்டாடத் தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில்   சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்  100க்கும் மேற்பட்டோர் தடையை மீறி பேருந்து தினத்தை கொண்டாடியுள்ளனர். இவர்கள் ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூ அருகே உள்ள பூங்காவிலிருந்து அரசு  பேருந்தை  அலங்காரம் செய்தும், பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறியும், படிகளில் தொங்கியும்  சாலையில் வலம்வந்துள்ளனர். 

இதனால் புல்லா அவென்யூ சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரைக் கண்டதும் மாணவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.  

 

இருப்பினும் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட   17 மாணவர்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.