×

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் விடுமுறை : பள்ளிக் கல்வித் துறை

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், குழந்தைகளை எளிதில் பாதிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் விடுமுறை அளிக்க அவசியம் இல்லை எனத் தமிழக அரசு சார்பில் தெரிவித்ததன் பேரில், விடுமுறை அளிக்கக் கோரிய வழக்கை நீதிபதிகள் நிராகரித்தனர்.
 

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், குழந்தைகளை எளிதில் பாதிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் விடுமுறை அளிக்க அவசியம் இல்லை எனத் தமிழக அரசு சார்பில் தெரிவித்ததன் பேரில், விடுமுறை அளிக்கக் கோரிய வழக்கை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதனிடையே கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய பிளஸ்2 தேர்வுகள் 24 தேதி முடிவடைகிறது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26 ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு வரும் 27 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நிறைவடைகின்றன.

அதன் படி, அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் போடப்படும் வேலை நாட்கள் அட்டவணையின் படி 21 ஆம் தேதி தான் விடுமுறை தொடங்குகிறது. அதனால் அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.