×

பலத்த காற்றுடன் கரையை கடக்க துவங்கியது ஃபனி புயல்: ஒடிசாவில் உஷார் நிலை!?

ஒடிசாவின் கோபால்பூர்- சந்த்பாலி இடையே ஃபனி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. ஒடிசா: ஒடிசாவின் கோபால்பூர்- சந்த்பாலி இடையே ஃபனி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபனி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று பகல் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சரியாக 8.30 மணி அளவில் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளது. இதனால் அங்குக் கனமழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,
 

ஒடிசாவின்  கோபால்பூர்- சந்த்பாலி இடையே ஃபனி  புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 

ஒடிசா: ஒடிசாவின்  கோபால்பூர்- சந்த்பாலி இடையே ஃபனி  புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 

வங்கக்கடலில் உருவான ஃபனி  புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று பகல் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சரியாக 8.30 மணி அளவில் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளது. இதனால் அங்குக் கனமழை பெய்து வருகிறது.

பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.  மேலும் ஒடிசாவின் கடலோர பகுதிகளில்  வசித்து வரும் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு உணவு வழங்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது. 

இந்நிலையில், இன்று காலையில் ஒடிசாவின் புரி பகுதியில், கோபால்பூர்- சந்த்பாலி இடையே ஃபனி  புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மணிக்கு  170 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. புயல் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் கடலோர பகுதிகளில் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.  ஒடிசாவுக்கு இன்று இயக்கப்பட இருந்த 223 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.