×

பரவை முனியம்மா வெளியிட்ட அதிரடி வீடியோ! 

பிரபல நடிகை பரவை முனியம்மா உடல்நல குறைவால் மரணமடைந்து விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக
 

பிரபல நடிகை பரவை முனியம்மா உடல்நல குறைவால் மரணமடைந்து விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்தன.

ஆனால் அது உண்மையில்லை என்பதை உணர்த்த பரவை முனியம்மாவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ”அதில் நான் நலமுடன் இருக்கிறேன், எனக்கு எதுவும் ஆகவில்லை” என பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.