×

பதவியேற்றவுடன் சுவர் ஏறிக் குதித்துத் தப்பியோடிய கவுன்சிலர் !

தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றனர். அதே போல, மதுரை மாவட்டத்திலும் வார்டு கவுன்சிலர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொறியியல் பட்டதாரி அரவிந்த் என்பவர் போட்டியிட்டு
 

தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றனர். அதே போல, மதுரை மாவட்டத்திலும் வார்டு கவுன்சிலர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்  8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொறியியல் பட்டதாரி அரவிந்த் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்டார். 

இன்று காலை பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் திடீரென அந்த அலுவலகத்தின் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்த யாருக்கும் அவர் ஏன் அங்கிருந்து தப்பி ஓடினார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து கட்சி தொண்டர்களும் சுயேச்சை வேட்பாளர் அரவிந்தனின் ஆதரவைப் பெற நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.