×

பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு

அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை: அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
 

அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை: அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

தினமும் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சாலைகளில் வீணாக சுற்றிக் கொண்டிருப்பவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பும் பணியிலும் விதிமுறையை மீறுபவர்களை தண்டிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் ஒருவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.