×

பணி மாற்றம் செய்ய பணம் கேட்பதாக புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் புகார்!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. அதனால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, 1,500 ஆய்வக டெக்னீசியன், 500 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் படி திருச்சியில் 39 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலருக்கு செல்போனில் அழைப்பு
 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. அதனால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக,  1,500 ஆய்வக டெக்னீசியன், 500 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

அதன் படி திருச்சியில் 39 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலருக்கு செல்போனில் அழைப்பு விடுத்த நபர், நீங்கள் விரும்பிய இடங்களுக்கு பணி மாற்றம் செய்து கொடுக்க பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் இதனைப்பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை பற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர், செல்போனில் பேசிய நபர் அரசுத்துறையை சேர்ந்தவராக இருக்க முடியாது. இதுவரை 31 பேர் தான் பணியில் சேர்ந்துள்ளனர். இது தொடர்பாக முறையான புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.