×

பணமதிப்பிழப்பை அறியாமல் பணத்தை இழந்த திருப்பூர் பாட்டிகள்: நேரில் அழைத்து உதவிய ஆட்சியர் !

பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை , அவர்களது மருத்துவச் செலவிற்காக மகன்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சேமித்து வைத்த பணம் முழுவதுமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள். திருப்பூர் மாவட்டம், பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75) மற்றும் தங்கம்மாள்(78) தங்களது பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை , அவர்களது மருத்துவச் செலவிற்காக மகன்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சேமித்து வைத்த பணம்
 

பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை , அவர்களது மருத்துவச் செலவிற்காக மகன்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சேமித்து வைத்த பணம் முழுவதுமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள். 

திருப்பூர் மாவட்டம், பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75) மற்றும் தங்கம்மாள்(78) தங்களது பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை , அவர்களது மருத்துவச் செலவிற்காக மகன்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சேமித்து வைத்த பணம் முழுவதுமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இந்த பணம் செல்லாது. இதனை எப்போதோ மாற்றி விட்டார்கள் என்று கூறியுள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டிகள் பணம் செல்லாமல் அறிவிக்கப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்றும் இந்த பணத்தைப் பல ஆண்டுகளாகப் பேரன், பேத்திகளுக்குக் கொடுப்பதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்தோம் என்று வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குடும்பம் பாட்டிகளின் மருத்துவச் செலவிற்குப் பணம் இல்லாமல் தவித்து வந்தது. 

இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்குத் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, அந்த பாட்டிகள் இரண்டு பேரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான அரசாணையை வழங்கினார். அதுமட்டுமின்றி, அவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பிற்குப் பிறகு மூதாட்டிகள் வைத்திருக்கும் 46 ஆயிரம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.