×

பட்டாக்கத்தியுடன் ‘ரூட் தல’ திருமணத்தில் கேக் கட்டிங்…மாமியார் வீட்டில் வைத்து அலேக்காக தூக்கிய போலீஸ்!

கல்லூரி மாணவர்கள் சிலரும் கெத்துக்காக செய்கிறோம் என்று போலீசில் வசமாக சிக்கி கொண்டு தவிக்கின்றனர். சமீபகாலமாகப் பிறந்தநாள் கேக் வெட்ட அரிவாள், வாள் போன்றவற்றைப் பயன்படுத்தும் நடைமுறை சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடி பினு கைது செய்யப்பட்டார். அதேபோல் கல்லூரி மாணவர்கள் சிலரும் கெத்துக்காக செய்கிறோம் என்று போலீசில் வசமாக சிக்கி கொண்டு தவிக்கின்றனர். அந்த வகையில் சென்னை திருவேற்காடு பகுதியில் புவனேஷ் என்பவருக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று திருமணம் நடைபெற்றது.
 

கல்லூரி மாணவர்கள் சிலரும் கெத்துக்காக செய்கிறோம் என்று போலீசில் வசமாக சிக்கி கொண்டு தவிக்கின்றனர்.  

சமீபகாலமாகப் பிறந்தநாள் கேக் வெட்ட அரிவாள், வாள் போன்றவற்றைப் பயன்படுத்தும் நடைமுறை சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடி பினு  கைது செய்யப்பட்டார். அதேபோல் கல்லூரி மாணவர்கள் சிலரும் கெத்துக்காக செய்கிறோம் என்று போலீசில் வசமாக சிக்கி கொண்டு தவிக்கின்றனர்.  

அந்த வகையில் சென்னை திருவேற்காடு பகுதியில் புவனேஷ் என்பவருக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று திருமணம் நடைபெற்றது.  பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலயின் திருமணத்தில்  பங்கேற்க முன்னாள், இன்னாள் மாணவர்கள்  பட்டா கத்தியுடன் நுழைந்ததோடு, மணமகனை அந்த கத்தியை கொண்டு கேக் வெட்டச்சொல்லியுள்ளனர்.

மணமகனும்  கத்தியை பிடித்து கேக் வெட்டிய  நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

 பட்டா கத்தியுடன் வந்து கேக் வெட்ட தூண்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேக் வெட்டிய மணமகனை போலீசார், மாமியார் வீட்டுக்கு விருந்துக்காகச் சென்ற இடத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் மணமகனின் தம்பியுடன் சேர்த்து 4 பேரை வளைத்து பிடித்துள்ள போலீசார், தலைமறைவான மற்ற மாணவர்களை தேடி வருகின்றனர்.