×

படப்பிடிப்பிலிருந்து அழைத்து வந்து விஜய்யை சோதனை செய்ததற்கு வழக்கு தொடுக்கலாம்: சுப்பிரமணியன் சுவாமி

பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்றிரவு சோதனை நிறைவு பெற்றது. நடிகர் விஜய்யை படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து வந்து சோதனை செய்தது சரியில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர்
 

பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இதை தொடர்ந்து நேற்றிரவு சோதனை நிறைவு பெற்றது. 

நடிகர் விஜய்யை படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து வந்து சோதனை செய்தது சரியில்லை என்று  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 


 

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.பின்பு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமானவரித்துறையினர்  நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதையடுத்து  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும்  பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இதை தொடர்ந்து நேற்றிரவு சோதனை நிறைவு பெற்றது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ ஒன்றும் இல்லை என்றால் விஜய் கவலைப்படத் தேவையில்லை. விஜய்யை படப்பிடிப்பிலிருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை செய்தது சரியில்லை. அதனால் விஜய் வழக்கறிஞர்களை வைத்து வழக்கு தொடுக்கலாம்’ என்றார்.