×

பசுபதி பாண்டியன் நினைவு தினம்! -தூத்துக்குடியில் தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நாளை முதல் 11ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நாளை முதல் 11ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி கலெக்டா; சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிப்பில் கூறியிருப்பதாவது: “தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில் வருகிற 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்தவித
 

தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நாளை முதல் 11ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நாளை முதல் 11ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி கலெக்டா; சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிப்பில் கூறியிருப்பதாவது:
“தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில் வருகிற 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவாி 9ம் தேதி (நாளை) மாலை 6 மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலிருந்து விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல் கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டுவருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் இந்த விழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள் சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது. நினைவு நாள் நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பசுபதி பாண்டியன் நினைவுதினத்தையொட்டி ஊர்வலம், கூட்டம் நடத்த விரும்பும் அமைப்புகள் அது குறித்து தூத்துக்குடி போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தை அணுகி அணுகி அனுமதி பெறலாம். இத்தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது” என்று கூறப்பட்டுள்ளது.