×

பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை!!

 

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக கார்த்திகை ,மார்கழி மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜைகள் ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். 

இந்தச் சூழலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிகழ்ச்சியையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதை அடுத்து கேரளா த,மிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலை கோவிலுக்கு செல்ல சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கனமழை தொடரும் என்பதால் பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா பகுதிகளில்  கனமழை பெய்து வருவதால் கல்கி அணை நிரம்பி உள்ளது. அதில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு  கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அறிவிப்பு நேற்று இரவு தான்  வெளியானது. இதன் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஏற்கனவே நிலக்கலில் தங்கியுள்ளனர். இவர்கள் 2,3 நாட்கள் ஆனாலும் ஐயப்பனை தரிசனம் செய்து  விட்டு தான் திரும்பி செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.