×

நெல்லை செவிலியர் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது மட்டுமில்லாமல் அவரது வீட்டிலிருந்த 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு
 

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது மட்டுமில்லாமல் அவரது வீட்டிலிருந்த 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வசந்த் மற்றும் ராஜேஷ் என்னும் இரண்டு பேர் இதில் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.