×

நெல்லை கண்ணன் கைதுக்கு கண்டனம்… எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம்!

எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும்
 

எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணனை பெரம்பலூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

இந்தநிலையில் நெல்லை கண்ணன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்ப பெற்று அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில், நெல்லை கண்ணன் கைதுக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் கைது தொடர்பாக இன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் திருமாவளவன், ஜாவாஹிருல்லா, திருமுருகன் காந்தி உள்பட பலரும் பங்கேற்றள்ளனர்.