×

நீதிமன்ற தீர்ப்பு ராஜ் பவனுக்கு விழுந்த அறை: வைகோ அதிரடி

கோபால் கைது விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜ் பவன் கன்னத்தில் விழுந்த அறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக கூறியுள்ளார். சென்னை: கோபால் கைது விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜ் பவன் கன்னத்தில் விழுந்த அறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து முதன் முதலில் வழக்கறிஞராக
 

கோபால் கைது விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜ் பவன் கன்னத்தில் விழுந்த அறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக கூறியுள்ளார்.

சென்னை: கோபால் கைது விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜ் பவன் கன்னத்தில் விழுந்த அறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து முதன் முதலில் வழக்கறிஞராக களத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ. இதனால் வைகோவுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது கைதை கண்டித்து முதன்முதலாக களத்திற்கு வந்து தர்ணா போராட்டம் நடத்திய வைகோவை நக்கீரன் கோபால் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கோபால் பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்லவே போராடினேன். இன்று நக்கீரனுக்கு வந்த நிலைமை நாளை அனைத்து ஊடகங்களுக்கும் வரலாம். எனவே  அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கோபால் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜ் பவன் கன்னத்தில் விழுந்த அறை. இதுவரை தமிழகம் கண்ட மிக மோசமான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது என்பதுதான் மதிமுக கொள்கை. அந்த பதவி ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்றார்.