×

நீதிபதி உத்தரவையும் மீறி இரவோடு இரவாக சிறையிலடைக்கப்பட்ட முகிலன்; உண்மை நிலவரம்!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற காணமால் போனார். திருச்சி: இரவோடு இரவாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண்
 

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற  காணமால் போனார்.

திருச்சி: இரவோடு இரவாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற  காணமால் போனார்.  இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் அவர் மீது  பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் வைத்து கடந்த 7 ஆம் தேதி  முகிலனை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது தனக்கு நெஞ்சுவலி என்று முகிலன் கூறியதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்று காலை 10 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  இருப்பினும்  முகிலனை இரவோடு இரவாக  கரூருக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார்  இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து முகிலனை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முகிலனோ தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, உங்களுக்கு திருச்சி சிறையில் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிப்பார்கள் என்றார். இதை தொடர்ந்து  திருச்சி அழைத்துச் செல்லப்பட்ட முகிலன் அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.