×

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இலக்கை அடைந்த ஹதியா: கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

மதம் மாறி காதலனை கரம் பிடித்து நீதிமன்றம் வரை சென்று வென்ற ஹதியா பல தடைகளை தண்டி மருத்துவராகி உள்ளார். சேலம்: மதம் மாறி காதலனை கரம் பிடித்து நீதிமன்றம் வரை சென்று வென்ற ஹதியா பல தடைகளை தண்டி மருத்துவராகி உள்ளார். கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா. சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த இவர் 2017-ல் வீட்டை விட்டு வெளியேறி முஸ்லீம் மதத்திற்கு மாறியதோடு காதலன் ஷபின்
 

மதம் மாறி காதலனை கரம் பிடித்து நீதிமன்றம் வரை சென்று வென்ற ஹதியா பல தடைகளை தண்டி மருத்துவராகி உள்ளார்.

சேலம்: மதம் மாறி காதலனை கரம் பிடித்து நீதிமன்றம் வரை சென்று வென்ற ஹதியா பல தடைகளை தண்டி மருத்துவராகி உள்ளார்.

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா. சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த  இவர்  2017-ல் வீட்டை விட்டு வெளியேறி முஸ்லீம் மதத்திற்கு மாறியதோடு  காதலன் ஷபின் ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அகிலாவை காணவில்லை என உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை அசோகன் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், தனது மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான  ஹதியா (அகிலா) தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹதியா என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதை விசாரித்த  நீதிமன்றம் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தது, திருமணப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹதியாவின் கணவர் ஷபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 24 வயதான ஹதியா தனது கணவரை சுயமாகத் தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த 2018  மார்ச் மாதம்  தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஹதியா, ஜஹான் திருமணம் சட்டப்படி செல்லும், இதை செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும் ஹதியா சட்டப்படி தனது திருமணத்தை பதிவு செய்து இருப்பதால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தங்கி இருக்கலாம் என்றும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேலத்தில் ஹோமியோபதி படித்துவந்த ஹதியா, தனது மருத்துவப் படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 

 

allowfullscreen

இந்நிலையில் ஹதியா வெற்றிகரமாக மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளதாக  அவரின் கணவன் ஷஃபின் ஜஹான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘அனைத்துத் தடைகளையும் தாண்டி முக்கியமான இடத்துக்கு வந்துவிட்டார் ஹதியா. மருத்துவராக உன்னை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். டாக்டர் ஹதியா அசோகன்!’ என்று பதிவிட்டுள்ளார்.

பல தடைகளை தாண்டி  மருத்துவராகி சாதனை படித்துள்ள ஹதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.