×

நீட் தேர்வுக்கு ஆர்வம் இல்லை; தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு கலைகிறது

தமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை காரணமாக பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதனால், மாணவர்களும் பெற்றோரும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டார்கள் அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாமல் போராடி வருகிறார்கள் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவந்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைவான எண்ணிக்கையிலேயே நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக
 

தமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை காரணமாக பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதனால், மாணவர்களும் பெற்றோரும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டார்கள் அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாமல் போராடி வருகிறார்கள் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைவான எண்ணிக்கையிலேயே நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை காரணமாக பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதனால், மாணவர்களும் பெற்றோரும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டார்கள் அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாமல் போராடி வருகிறார்கள் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

2018 – 2019ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 2019 – 2020ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களே விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் குறைவு என்று கூறப்படுகிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தாலும் கூட மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மாணவர்களுக்கு பெயரளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த ஆண்டு பயிற்சி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி அரசு தரப்பில் தரப்படும் அழுத்தம் மற்றும் கட் ஆஃப் மார்க் அதிகரிப்பது, முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு மீது ஆர்வம் குறைந்ததையே இந்த ஆண்டு விண்ணப்பங்கள் காட்டுகின்றன என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு என்னதான் கூறினாலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதைத் தடுக்கும் வடிகட்டியாக நீட் உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.