×

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்: குற்றத்தை ஒப்புக் கொண்டார் உதித் சூர்யா..

இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி புகார் எழுந்தது. அந்த புகார் விசாரித்த நீதி மன்றம் மாணவரின் குற்றம் நிரூபிக்கப் பட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது மதுரை உயர் நீதி மன்றம். இதனால், தலைமறைவான உதித் சூர்யாவை நேற்று தனிப்படைக் காவல் துறையினர் குடும்பத்துடன் திருப்பதியில் கைது
 

இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி புகார் எழுந்தது. அந்த புகார் விசாரித்த நீதி மன்றம் மாணவரின் குற்றம் நிரூபிக்கப் பட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது மதுரை உயர் நீதி மன்றம். இதனால், தலைமறைவான உதித் சூர்யாவை நேற்று தனிப்படைக் காவல் துறையினர் குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்தனர். 

அதன் பின், சிபிசிஐடி விசாரணைக்குக் கொண்டு செல்லப் பட்ட உதித் சூர்யா, கடும் விசாரணைக்குப் பின்  இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்ததால் ஆள் மாறாட்டம் செய்ததாக மாணவரும் மாணவரின் தந்தையும்  ஒப்புக் கொண்டனர். மேலும், இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து, உதவிய நபர்களை சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க விரைவில் மும்பை செல்லப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.