×

நீட் தேர்வில் மோசடி செய்த மாணவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

நீட் நுழைவு தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு பதிலாக மோசடியாக தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு பதிலாக மோசடியாக தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி புகார் எழுந்தது. இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3
 

நீட் நுழைவு தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு பதிலாக மோசடியாக தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

நீட் நுழைவு தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு பதிலாக மோசடியாக தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி புகார் எழுந்தது. இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. அதன்பின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீட் ஆள்மாறாட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து அம்பலமாகின. 

இந்நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். தமிழ்நாடு மாணவர்களுக்கு பதிலாக அவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி தேர்வு எழுதியவர்கள், புகைப்படங்களில் இருப்பவர்களின் முகவரி மற்றும் விவரங்களை பொதுமக்கள் தங்களிடம் பகிரலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.